Land for sale at Salem and Periyar Districts

 

More..

In India, GICMAT Organization, which had been formed in 2006, is one of the pioneers in real estate and reduction of global warming.

More..

District details - In Tamil

................................................................................................................................................................................................................................................

தேனி மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம்

மதுரை மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டம்

சிவகங்கை மாவட்டம்

விருதுநகர் மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்

தேனி மாவட்டம்

தேனி மாவட்டம் கடந்த 1983ம் ஆண்டில் உதயமானது. அதற்குமுன் இப்பகுதிகள் அனைத்தும் மதுரை மாவட்டத்துடன் இணைந்திருந்தது. தேனி மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 3243.3ச.கி.மீட்டர் ஆகும். மொத்த ஜனத்தொகை 10லட்சத்து 93ஆயிரத்து 950 பேர்கள் ஆகும். இம்மாவட்டத்தில் படித்தவர்கள் 50சதவீதம் மட்டுமே உள்ளனர்.

மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களையும் கேரளா மற்றும் மேற்கு மலைத் தொடர்ச்சி மலைகள் ஆகியவைகள் சூழ  அமைந்துள்ளது தேனி மாவட்டம்.

சிறப்புகள்

சுருளி ஆண்டவர் கோவில், சனீஸ்வரன் கோவில், வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில், போடி பரமசிவன் கோவில் ஆகியவைகள் இம்மாவட்டத்தின் சிறந்த வழிபாட்டுத் தலங்களாகும். வைகை அணை சுருளி அருவி மேகமலை அருவி டைகர பால்ஸ் லோயா கேம்ப் மின் உற்பத்தி நிலையம் போன்றவைகள் சிறந்த சுற்றுலா தலமாகவூம் இம்மாவட்டத்திற்கு பெருமை சோக்கின்றன.

தொழில்கள்

விவசாயம் முக்கிய தொழிலாகவும், நெல் முக்கிய பயிராகவும் பயிரிடப்பட்டு வருகின்றது. இவை தவிர பருத்தி, மிளகாய், கரும்பு, முருங்கை, கொட்டை முந்திரி ஆகியவைகளும் அதிக அளவில் பயிரடப்படுகின்றது. ஏலம், மிளகு, காப்பி, திராட்சை, மாம்பழம், வாழை, தென்னை போன்றவைகளும் விளைவிக்கப்படுகின்றன. நூற்ப்பாலைகள் டெக்ஸ்டைல் மில்கள் மசாலா பொடி தயாரிப்பு தொழிற்ச் சாலைகளும் அதிகம் உள்ளது.

வெப்ப நிலை

இம்மாவட்டத்தின் சராசரி வெப்பநிலை குறைந்த அளவு 21° C யும் அதிக அளவு 38.5° C யுமாக இருக்கின்றது.

மழை அளவு

ஆண்டின் சராசரி மழை அளவு 281மி.மீட்டராக உள்ளது. தென்மேற்கு பருவ மழையின் போதும், வடகிழக்கு பருவ மழையின் போதும், இம்மாவட்டத்தில் அதிக மழைப் பொழிவு இருக்கும் நீர்ப்பாசனம்: தேனி மாவட்டத்தில் கிணற்றுப்பாசனமும் குளத்துப் பாசனமும் பெருமளவில் உள்ளது. கொட்டகுடியைப் பிறப்பிடமாகக் கொண்டு ஓடிவரும் கொட்டகுடி ஆறு, பெரியாறு, வருஷநாடு மலைப்பகுதியிலிருந்து உற்பத்தியாகும் வைகை ஆறு ஆகியவைகள் இம்மாவட்டதின் நீர்ப்பாசனத்திற்கும், குடிநீர் உபயோகத்திற்கும் பெரிதும் பயன்படுகின்றது. வைகை அணை, சுருளி ஆறு அணை, 18ம் கால்வாய் ஆகியவைகள் விவசாயப் பாசனத்திற்கு பெரிதும் பயன்பட்டு வருகின்றது.

மண்வளம்

தேனி மாவட்டம் முழுவதிலும் செம்மண் நிலங்கள் பெருமளவில் உள்ளன. இந்த மண்ணில் அனைத்து வகையான பயிர்களையும் பயிரிடலாம். மா, வாழை, தென்னை, முந்திரி, திராட்சை, நெல், பூ வகைகள் மற்றும் பிற தானிய வகைகள் ஆகிய அனைத்தும் நன்றாக செழித்து வளரும்.

நிலத்தடி நீர்

நிலத்தடி நீரைப் பொறுத்தவரை அதன் பயன்பாடு இடத்திற்கு இடம் வேறுபடும். ஆனால் பொதுவாக தேனி மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் சுமார் 40அடி முதல் 150அடி ஆழத்திற்குள்ளாக நல்ல சுவையான நிலத்தடி நீர் கிடைக்கும்.

 

திண்டுக்கல் மாவட்டம்

மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த திண்டுக்கல் 15.09.1985ம் ஆண்டு தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. 6267 ச.கி.மீட்ட‌ர் பரப்பளவைக் கொண்டுள்ள திண்டுக்கல் மாவட்டம் 7 தாலுகாக்கள் 14 ஒன்றியங்கள் 3 நகராட்சிகள் 24 பேருராட்சிகள் 306 கிராம பஞ்சாயத்துக்களைக் கொண்டுள்ளதாகும். இம்மாவட்டத்தில் 19,23,014 பேர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களில் படித்தவர்கள் 69.83 சதவீதம் உள்ளன‌ர்.

திருச்சி மாவட்டம், கோயம்புத்துர் மாவட்டம், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களும், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களும் திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளது. திண்டுக்கல்லின் புராண காலப் பெயர் திண்டீஸ்வரம் என்பதாகும்.

சிறப்பு அம்சங்கள்

திண்டுக்கல்லில் உள்ள மலைக்கோட்டை, பழநியுலுள்ள பழநி ஆண்டவர் திருக் கோவில், மஞ்களார் அணைக்கட்டு, பாலாறு-பொருந்தலாறு அணை மற்றும் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கோடைவாசஸ்தலமான கொடைக்கானல் ஆகியவைகள் இம்மாவட்டத்தின் தனிச் சிறப்புகளாகும்.

தொழில்கள்

விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. வத்தலக்குண்டு மற்றும் நிலக்கோட்டை பகுதிகளில் பூ வகைகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு, அதன் மூலம் பெரும் வருவாய் ஈட்டப்பட்டு வருகின்றது. ஒட்டன்சத்திரம் பகுதியில் வெங்காயம், தக்காளி, வேர்க்கடலை, பிற காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது. தயிர், நெய் ஆகியவற்றிற்கென்று தனி சந்தை உள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உருளைக் கிழங்கு, பட்டர் பீன்ஸ் ஆகியவைகள் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. பிளம்ஸ், பேரிக்காய் போன்ற பழங்கள் அதிக அளவிலும், ஆப்பிள் குறைந்த அளவிலும் விளைவிக்கப்படுகின்றன. நூற்பாலைகள், எண்ணெய் மில்கள், உணவுப் பொருட்கள் தயாரிப்பு, தோல்பதனிடும் தொழிலகங்கள் ஆகியவைகள் அதிக அளவில் உள்ளன. முன்பொரு காலத்தில் பூட்டு தயாரிப்பிற்கு பெயர் பெற்ற நகரமாக திண்டுக்கல் திகழ்ந்தது. ஆனால் தற்போது இத்தொழில் நலிந்து காணப்படுகிறது.

வெப்ப நிலை

இம்மாவட்டத்தின் சராசாரி வெப்பநிலை குறைந்த அளவு 8° யும் அதிக அளவு 34.3° யுமாக இருக்கின்றது.

மழை அளவு

ஆண்டின் சராசரி மழை அளவு 494.35மி.மீட்டராக உள்ளது.

நீர்ப்பாசனம்

விவசாயப் பாசனத்திற்கு குளங்கள் ஏரிகள் கிணறுகள் பெருமளவில் பயன்படுத்த‌ப்படுகின்ற‌ன. இவை தவிர தர்மத்துப்பட்டி அணை, காமராஜர் அணை, மஞ்சளாறு அணை, மருதாநதி அணை, பரப்பலாறு அணை, பாலாறு - பொருந்தலாறு அணை, வரதமாநதி அணை, மற்றும் குதிரையாறு அணை ஆகியவைகள் நீர்ப்பாசனத்திற்கு பெரிதும் பயன்பட்டுவருகின்றது.

மண் வளம்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பெரும்பாலும் செம்மண் நிலங்களே அதிகம் உள்ளது. ஒரு சில இடங்களில் சரளை கற்கல் கலந்த செம்மண் நிலங்களும் உள்ளன. இவை தவிர கரம்பை என்று சொல்லக்கூடிய (குளத்து மண்) கருப்பு மண் வகையும் காணப்படுகின்றது. இத்தகைய மண்ணில் நெல், சோளம், தக்காளி, வெங்காயம் பிற காய் வகைகள் மிளகாய் போன்றவைகளும் வாழை, தென்னை, நெல்லி போன்ற பழ வகைகளும் இங்கு பயிரிடப்பட்டு வருகின்றன. சந்தனம், தேக்கு, பீநாரி எனப்படும் தீக்குச்சி மரம், பதிமுகம், குமிழ், காட்டாமணக்கு போன்ற மர வகைகளும் இம்மண்ணில் செழித்து வளரும் தன்மை உள்ளது.

நிலத்தடி நீர்

நிலத்தடி நீர் இடத்திற்கு இடம் வேறுபட்டாலும் பொதுவாக திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 60அடி முதல் 150அடி ஆழத்தில் நல்ல தண்ணீர் வசதி கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. விவசாயம் செய்வதற்கேற்ற நிலத்தடி நீர் கிடைப்பதால் இப்பகுதியில் விவசாயம் பெருகியுள்ளது. இது தவிர குளம் மற்றும் கிணற்றுப் பாசனமும் அதிகம் உள்ளது.

 

மதுரை மாவட்டம்

தமிழ்நாட்டிலுள்ள பெரிய மாவட்டங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது மதுரை மாவட்டமாகும். 3741ச.கி.மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இம்மாவட்டம் 25லட்சத்து 62ஆயிரத்து 279மக்கள் தொகையினைக் கொண்டுள்ளது. 70சதவீதம் மக்கள் படித்தவர்களாக உள்ளார்கள்.

மதுரை மாவட்டத்தின் எல்லைப்புற மாவட்டங்களாக சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. சிறப்புகள்:- மதுரை என்றதுமே எல்லோருக்கும் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். திருமலை நாயக்கர் மஹால், அழகார் கோவில், திருப்பரங்குன்றம், முருகன் கோவில் ஆகியவைகள் சிறந்த வழிபாட்டுத் தலங்களாகும். இராணிமங்கம்மாள் வாழ்ந்த அரண்மனையில் காந்திஜி அருங்காட்சியகம் அமைந்துள்ளது. நாயக்கார் மஹாலில் நாயக்கார் பற்றியும், சிலப்பதிகாரம் பற்றியும் தினமும் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

தொழில்கள்

விவசாயம் முக்கிய தொழிலாக இருக்கின்ற‌து. டெகஸ்டைல் மில்கள் நூற்பாலைகள் ‘ஏ’ பெல்ட் தயாரிப்பு தொழிற்சாலை, குளிர்பானம் தயாரிப்பு என்று சிறிய, பெரிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.

வெப்ப நிலை

இம்மாவட்டத்தில் குறைந்த அளவு வெப்பம் 20° C யாகவும் அதிக அளவு 38°C யாகவும் இருக்கும்.

மழை அளவு

இம்மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 214.25 மி.மீட்ர் ஆகும். தென்மேற்கு பருவ மழையின்போது 300.4 மி.மீட்டரும், வடகிழக்கு பருவ மழையின்போது 406.5 மி.மீட்டரும், கோடை காலத்தில் 112.7 மி.மீட்டர் மழையும் பெறுகின்றது.

நீர்ப்பாசனம்

இம்மாவட்டத்தில் வைகை ஆறு ஓடுவதால் பாசனத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. இது தவிர ஏரி குளங்களும் அதிகம் பயன்படுகின்றது. கிணற்றுப் பாசனமும் அதிகளவில் உள்ளது.

மண் வளம்

மதுரை மாவட்டத்தின் பெரும்பகுதி செம்மண் நிலங்களைக் கொண்டுள்ளது. குளத்து மண் என்று சொல்லப்படும் கருப்பு மண்ணும் ஆங்காங்கே காணப்படுகின்றது. அனைத்து வகையான விவசாயத்திற்கும், மரங்கள் வளர்ப்பதற்கும் இவ்வகை மண் ஏற்றதாகும்.

 

இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்டமானது 1910ம் ஆண்டு உதயமானது. இம்மாவட்டம் 4089.57ச.கி.மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. 11லட்சத்து 83ஆயிரத்து 321 பேர்களைக் கொண்டுள்ள இம்மாவட்டத்தில் படித்தவ்ர்களின் எண்ணிக்கை 85சதவீதமாக உள்ளது.

சிவகங்கை மாவட்டம் வடக்கு எல்லையாகவும், புதுக்கோட்டை மாவட்டம் வடகிழக்கு எல்லையாகவும், மன்னார் வளைகுடா தெற்கு எல்லையாகவும், தூத்துக்குடி மாவட்டம் மேற்கு எல்லையாகவும், விருதுநகர் மாவட்டம் வடமேற்கு எல்லையாகவும் அமைந்துள்ளது.

சிறப்புகள்

இராமசாமி கோவில், இந்திராகாந்தி (பாம்பன்) பாலம், குருசடி தீவு, சேதுகரை, ஏர்வாடி தர்ஹா ஆகியவைகள் இம்மாவட்டத்தின் சிறப்புகளாகும்.

தொழில்கள்

விவசாயம் முக்கிய தொழிலாக இருக்கின்றது. நெல், சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற தானிய வகைகள் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. பருத்தி, மிளகாய், வேர்க்கடலை போன்றவைகளும் அதிகம் விளைவிக்கப்படுகின்றன.

வெப்ப நிலை

இம்மாவட்டத்தின் சராசரி வெப்பம் குறைந்த அளவு 22.3°C யாகவும் அதிக அளவு 37.8°C யாகவும் இருக்கும்.

மழை அளவு

மழைப்பொழிவானது ஆண்டிற்கு சராசரியாக 827மி.மீட்டராக கணக்கிடப்பட்டுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம்

திருச்சி மாவட்டத்திலிருந்து சில பகுதிகளும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து சில பகுதிகளும் பிரிக்கப்பட்டு, 14.01.1974ல் ஒன்றாக இணைக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் என்று பெயரிடப்பட்டது. 4663ச.கி.மீட்டர் பரப்பளவைக் கொண்ட இம்மாவட்டத்தில் மொத்த ஜனத்தொகை 14,52,269ஆகும். இதில் கல்வி கற்றவர்கள் 63.28சதவீதமாக உள்ளனர்.

திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களையும் வங்கக் கடலையும் எல்லைகளாக கொண்டுள்ளது புதுக்கோட்டை மாவட்டமாகும்.

சிறப்புகள்

ஆவுடையார் கோவில், குடுமியான் மலை, விராலிமலை, சித்தன்னவாசல் போன்ற இடங்கள் இம்மாவட்டத்திற்கு பெரும் சிறப்பைத் தேடித்தருவதாக இருக்கின்றது.

வெப்ப நிலை

இம்மாவட்டத்தின் சராசரி வெப்ப அளவு குறைந்தது 19.6° C யும் அதிக அளவாக 38.7° C யும் அளவிடப்பட்டுள்ளது.

மழை அளவு

இம்மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 921.6 மி.மீட்டர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

 

சிவகங்கை மாவட்டம்

1984ம் ஆண்டில் புதிதாக உதயமான சிவகங்கை மாவட்டம் 4189ச.கி.மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மொத்த ஜனத்தொகை 11லட்சத்து 55ஆயிரத்து 356ஆகும். இதில் கல்வி அறிவு பெற்றவர்கள் 72.18சதவீதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் சிவகங்கை மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளது.

சிறப்புகள்

பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில், காளீஸ்வரர் கோவில், குன்றக்குடி, இடைக்காட்டுர் கிறிஸ்தவ தேவாலயம் ஆகியவைகள் இம்மாவட்டத்தின் சிறப்புக்குரிய இடங்களாகும்.

வெப்ப நிலை

குறைந்த அளவு 23oC யாகவும் அதிக அளவு 38o C யாகவும் சராசரி வெப்ப நிலை காணப்படுகின்றது.

மழை அளவு

இம்மாவட்டத்தின் சராசரி மழை அளவு 345.5 மி.மீட்டராக கணக்கிடப்பட்டுள்ளது.

 

விருதுநகர் மாவட்டம்

இராமநாதபுரம் மற்றும் முந்தைய பசும்பொன் மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு 1985ம் ஆண்டு உதயமானது விருதுநகர் மாவட்டமாகும். 4243ச.கி.மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இம்மாவட்டத்தில் 17,51,548 பேர்கள் வசித்து வருகின்றார்கள். படித்தவர்கள் 62.91 சதவீதம் உள்ளனர்.

கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும், வடக்கில் மதுரை மாவட்டமும், வடகிழக்கில் சிவகங்கை மாவட்டமும், தெற்கில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளது.

சிறப்புகள்

ஏழைப்பங்காளன், பெருந்தலைவர் என்று மக்களால் போற்றப்பட்ட கர்மவீரர் காமராஜர் அவர்கள் இம்மாவட்டத்தில் பிறந்தது பெருமைக்குரியதாகும். ராஜபாளையத்திற்கு மேற்கே 15கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அய்யனார் நீர்வீழ்ச்சி, ஆண்டாள் கோவில், ரமண மகரிஷி பிறந்த இடம், சாஸ்தா கோவில் ஆகியவைகளும் இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்றன.

தொழில்கள்

நெல் பருத்தி எண்ணெய் வித்துக்கள் ஆகிய விவசாயம் சார்ந்த தொழில்கள் பெருமளவில் நடைபெற்று வருகின்றன.

அஸ்பெஸ்டாஸ் ஓடுகள் தயாரிப்பு, சிமெண்ட் உற்பத்தி, லைம்ஸ்டோன், ஜிப்சம் போன்ற தொழில்களும் இங்கு நடைபெறுகின்றன.

வெப்ப நிலை

இம்மாவட்டத்தின சராசரி வெப்ப அளவு குறைந்தது 20டிகிரி செல்சியசும் அதிக அளவு 37டிகிரி செல்சியசும் உள்ளது.

மழை அளவு

ஆண்டு சராசரி மழை அளவு 812 மி.மீட்டராகும்.

நீர்ப்பாசனம்

விவசாயம் மற்றும் பிற உபயோகத்திற்கென்று பல ஏரி, குளங்கள் இருக்கின்றது. இதில் பெரியாறு அணை, கோவிலாறு அணை, பிளவக்கால் அணை, அர்ஜீனா அணை ஆகியவைகள் விவசாயத்திற்கு பெரிதும் பயன்பட்டு வருகின்றது.

 

திருநெல்வேலி மாவட்டம்

6 ஆயிரத்து 823 ச.கி.மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம் 1986ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் வாழும் மொத்த ஜனத்தொகை 28லட்சத்து 1194 ஆகும். படித்தவர்களின் எண்ணிக்கை 68.44 சதவீதமாகும்.

மன்னார் வளைகுடா, விருதுநகர் மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டங்களை எல்லையாக இம்மாவட்டம் கொண்டுள்ளது.

சிறப்புகள்

முண்டத்துறை வனவிலங்கு சரணாலயம், மாவட்ட விஞ்ஞான ஆய்வு மையம், பறவைகள் சரணாலயம், குற்றாலம் நீர் வீழ்ச்சி, கிருஷ்ணாபுரம், நெல்லையப்பர் ஆலயம், மாஞ்சோலை வனப்பகுதி, ஊசி கோபுரம் ஆகியவைகள் இம்மாவட்டத்தின் சுற்றுலா தலமாக இருப்பது இம்மாவட்டத்தின் சிறப்பாகும்.

தொழில்கள்

விவசாயம் முக்கிய தொழிலாக இருக்கின்றது. நெல் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

வெப்ப நிலை

குறைந்த அளவு 20°C யாகவும் அதிக அளவூ 37.1°C யாகவும் சராசரி வெப்ப அளவு காணப்படுகின்றது.

மழை அளவு

ஆண்டின் சராசரி மழை அளவு 814.08 மி.மீட்டராக இருக்கின்றது. தென்மேற்கு பருவ மழையின்போது அதிக அளவு மழை பெறும் வாய்ப்புள்ளது.

நீர்ப்பாசனம்

தாமிரபரணி பாலாறு போன்ற 21 ஆறுகள் இம்மாவட்ட‌த்தில் ஓடுகின்றன. இவை தவிர ஏரிகள், குளங்களும் நீர்ப்பாசனத்திற்கு பெரிதும் பயன்படுகின்றன.

 

தூத்துக்குடி மாவட்டம்

தமிழகத்தின் தென்பகுதியில் தூத்துக்குடி மாவட்டம் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 4621ச.கி.மீட்டராகும். 15லட்சத்து 65 ஆயிரத்து 743 மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களில் படித்தவர்கள் 87சதவீதமாகும்.

இம்மாவட்டத்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்கில் மன்னர் வளைகுடாவும், மேற்கு மற்றும் தென்மேற்கில் திருநெல்வேலி மாவட்டமும் , வடக்கில் விருதுநகர் ராமநாதபுரம் மாவட்டங்களும், தெற்கில் இந்துமகா சமுத்திரமும் எல்லைகளாக அமைந்துள்ளது.

சிறப்புகள்

முத்துக் குளிப்பிற்கு பெயர் பெற்ற தூத்துக்குடி துறைமுகம் பாண்டிய மன்னர்களது ஆட்சியின்போது வெளிநாடுகளுடனான வணிகத்திற்கு பெரிதும் பயன்பட்ட கொற்கை துறைமுகம், வாஞ்சி மணியாச்சி, ஆதிச்சநல்லுர், பாஞ்சால‌ங்குறிச்சி போன்ற இடங்கள் வரலாற்றுச் சிறப்பை இம்மாவட்டத்திற்கு பெற்றுத்தந்துள்ளது.

வெப்ப நிலை

இம்மாவட்டத்தின் சராசரி வெப்பநிலை குறைந்த அளவு 18.4°C வும் அதிக அளவு 40.5C வும் உள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது. 01.11.1956ல் உருவான இம்மாவட்டம் 1672ச.கி.மீட்டர் பரப்பளவு உள்ளதாகும். இதில் வாழும் மொத்த ஜனத்தொகை 16லட்சத்து 76ஆயிரத்து 34ஆகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இம்மாவட்டத்தில்தான் அதிக பட்சமாக 90சதவீத மக்கள் கல்வி அறிவைப் பெற்றுள்ளார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு பக்கம் திருநெல்வேலி மாவட்டமும், தென்கிழக்கு பக்கம் மன்னார் வளைகுடாவும், தெற்கு மற்றும் தென்மேற்கு பக்கம் இந்துமகா சமுத்திரம், அரபிக்கடலும், மேற்கு மற்றும் வடமேற்கு பக்கம் கேரளாவும் எல்லைகளாக அமைந்துள்ளது.

சிறப்புகள்

மகாத்மா காந்தி நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, காமராஜர் மணிமண்டபம், விவேகானந்தர் பாறை, பத்மநாபபுரம் அரண்மனை, முட்டம் கடற்கரை ஆகியவைகள் இம்மாவட்டத்தின் சிறப்புகளாகும்.

வங்கக்கடல், இந்துமகா சமுத்திரம், அரபிக்கடல் ஆகிய மூன்று கடல்களும் கன்னியாகுமரியில் சங்கமமாவதும், சூரிய‌னின் உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகிய இரண்டையும் இங்கு காண்பதும் இம்மாவட்டத்தின் தனிச் சிறப்பாகும்.

தொழில்கள்

விவசாயம், மீன் பிடித்தல் ஆகிய இரண்டும் முக்கிய தொழிலாக உள்ளது. அனைத்து வகையான பயிர்களும் இங்கு விளைவிக்கப்படுகின்றன. தென்னை, பனை ஆகியவைகள் அதிக அளவில் இங்கு வளர்க்கப்படுவதுடன், அதனைச் சார்ந்த தொழில்களும் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.

வெப்ப நிலை

இம்மாவட்டத்தின் சராசரி வெப்ப நிலை குறைந்த அளவு 21°C வும் அதிக அளவு 35°C வும் உள்ளது.

மழை அளவு

இம்மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 1456.8மி.மீட்டராக கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிகம் மழை பெறும் மாவட்டம் என்ற பெருமையும் இம்மாவட்டத்திற்கு உண்டு.

நீர்ப்பாசனம்

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் பிற மாவட்டங்களைப் போலில்லாமல் நல்ல மழைப்பொழிவு பெறும் மாவட்டமாக உள்ளது.

இம்மாவட்டம் நல்ல வளத்துடன் இருப்பதற்கு தாமிரபரணி, பாளையாறு, வள்ளியாறு, பொன்னிய வைகால், பரளியாறு ஆகிய ஐந்து ஆறுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஆறுகளில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுகளில் தேக்கிவைக்கப்பட்டுள்ள நீரை விவசாயத்திற்கும், குடிநீர் மற்றும் பிற காரியங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.

மண் வளம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 வகையான மண்வளம் காணப்படுகிறது. பெரும்பாலும் செம்மண் மற்றும் கருப்பு வகை மண் கொண்ட நிலங்கள் அதிகம் உள்ளது.

அனைத்து வகையான பயிர் வகைகளை பயிர் செய்வதற்கும், தென்னை, வாழை, பலா, தேக்கு உட்பட அனைத்து வகையான மர வகைகள் வளர்ப்பதற்கும் இத்தகைய மண்வளம் ஏற்றதாக இருக்கின்றது.